கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.
இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்காத நிலையில், 7 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…