நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.
மேலும் இந்திரா கேண்டீனை விரிவுபடுத்தவும் அறிவிப்பை வெளியிட்டார்.இது குறித்த அறிவிப்பில் புதிதாக 247 இந்திரா கேண்டீன் திறக்கப்படும்.இது கர்நாடகாவில் உள்ள அனைத்து தாலுகாக்கள் ,மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் திறக்கப்படும்.ரூ.211 கோடி செலவில் இவை புதிதாக திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரூ.25,000 வரை விவசாய கடன் செலுத்தி இருந்தால் திருப்பி அளிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…