கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆசிட் வீச்சில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்த சூழலில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநிலத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது.105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 67.51 சதவீத வாக்குகள் பதிவாகியது.தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.105 நகர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 2474 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமாக 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.இதில் 2709 வார்டுகளுக்கு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது
இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.மொத்தமுள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்பு வாரியாக 29 சிட்டி கவுன்சிலில் பாஜக 10லும், காங்கிரஸ் 5 இடங்களிலும், மஜத 3 இடத்திலும் வென்றுள்ளது.
மொத்தமுள்ள 53 முனிசிபாலிட்டியில் பாஜக 12லும், காங்கிரஸ் 19 இடங்களிலும், மஜத 8 இடத்திலும் வென்றுள்ளது. 20 டவுன் பஞ்சாயத்தில் பாஜக 7லும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மஜத 2 இடத்திலும் வென்றுள்ளது.வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 925 இடங்களிலும், பாஜக 861 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 337 இடங்களிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியே காலையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும் இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் இதிலும் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூரில் காங்கிரஸ் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆசிட் வீசப்பட்டுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆசிட் வீச்சில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அழிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…