கர்நாடகா காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்…!
கர்நாடகா காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகமே போர்க்களமாகி உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது வரும் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வரும் 12-ந் தேதி பந்த் நடைபெற உள்ளது.
தற்போது டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக எம்.பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.