கர்நாடகாவில் லஞ்சம் கொடுக்க பாஜக பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்எல்எ ஷிவராம் ஹெப்பர் தெரிவித்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த சமயத்தில் பாஜக தலைவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக கூறி, அது தொடர்பான சில ஆடியோக்களை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் யெல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் மனைவியிடம், பாஜகவை சேர்ந்தவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்காக பேரம் பேசுவது போன்று இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர், அது போலியான ஆடியோ என்றும், ஆடியோவில் இருப்பது தமது மனைவியின் குரலே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற ஆடியோவை வெளியிட்டவர்களுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…