கர்நாடகாவில் தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி…!!
கர்நாடகாவில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் முதோல் நகரில், முன்னாள் அமைச்சர் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். படுகாயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.