கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக கிளம்பியது போராட்டம்!
பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் குமாரசாமி தலைமையிலான அரசைக் கண்டித்தும் பெங்களூர் தவிர்த்து மூன்று மாவட்டங்களில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என்றும், விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் எடியூரப்பா செய்தியாளர்களிடம் விளக்கினார். பெங்களூர் ஆர்.ஆர். நகர் தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பந்த் நடைபெறாது என்றும் எடியூரப்பா குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.