கர்நாடகாவில் காங்-மஜத கூட்டணி ஆட்சி அமைய ஆல் இன் அழகு ராஜா இவர் தான்..!

Default Image

 

கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தவர் டி.கே.சிவக்குமார். குஜராத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு கடந்த ஆண்டு(2017) நடந்த தேர்தலில் அகமது பட்டீல் வெற்றி பெறுவதற்காக, குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரை பாதுகாக்கும் பொறுப்பை டி.கே.சிவக்குமாரிடம் காங்கிரஸ் மேலிடம் வழங்கி இருந்தது. அதன்படி, குஜராத்தில் இருந்து பெங்களூரு வந்த 44 எம்.எல்.ஏ.க்களையும் டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் டி.கே.சிவக்குமார், அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் குஜராத் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்ததுடன், டெல்லி மேல்-சபை தேர்தலில் அகமது பட்டீல் வெற்றி பெற டி.கே.சிவக்குமார் பக்க பலமாக இருந்தார். இதனால் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சியில் பிரபலமான தலைவராக உருவெடுத்தார். காங்கிரஸ் மேலிட தலைவர்களின் நம்பிக்கையையும் அவர் பெற்றார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. இதற்கு முக்கிய காரணம் டி.கே.சிவக்குமார் தான் என்றால் மிகையாகாது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, எம்.எல்.ஏ.க்களை முதலில் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைத்தார். பின்னர் ஐதராபாத்துக்கு அழைத்து சென்றார். ரெசார்ட்டிலேயே எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்ததால், அவர்களை பா.ஜனதாவினர் தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் போனது.

அதே நேரத்தில் பல எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினரால் தொடர்பு கொள்ள முடியாமல் பார்த்து கொண்டார். அத்துடன் நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க இருந்த எம்.எல்.ஏ.க்களான ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பட்டீலையும் கடைசி நேரத்தில் காங்கிரசுக்கு அழைத்து வந்த பெருமை டி.கே.சிவக்குமாரையே சாரும். பா.ஜனதாவின் ஆட்சி கனவை தகர்த்ததுடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதிலும் 2 முறையாக டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்