கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!
வருமானவரித்துறை , கர்நாடக மாநிலம் ஆனேக்கல் சட்டமன்ற உறுப்பினர் சிவன் வீட்டில் சோதனை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு மாவட்டத்தின் ஆனேக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிவன் வீட்டில் அதிகாலை 2 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து வந்த காங்கிரஸ் கட்சியினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் தூண்டுதல் பெயரிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சோதனையை உடனடியாக நிறுத்தக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.