பா.ஜனதாவின் பழைய கூட்டணி கட்சியான சிவசேனா, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உல்ஹாஸ் நாகரில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில் கர்நாடக விவகாரம் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-
எந்த கட்சிக்கு அதிக பலம் இருக்கிறதோ அந்த கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை.கவர்னர் வஜுபாய் வாலா ஜன சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சி தொண்டர் போல் நடந்து கொள்கிறார். கர்நாடகத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் டெல்லி உத்தரவுப்படி நடக்கிறது.
டெல்லி மேலிடம்தான் முடிவு எடுக்கிறது.கவர்னரைப் போல் முதல்-மந்திரிகளையும் நீங்களே நியமித்துக் கொண்டால் தேர்தல் எதற்கு? டெல்லியில் இருந்து முதல்-மந்திரியை நியமித்துக் கொள்ளுங்கள். அப்படி டெல்லியே நியமித்தால் தேர்தல் சமயங்களில் பிரசாரம் செய்ய வேண்டி இருக்காது. மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கும் இடையூறு இருக்காது.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது ராமர் கோவில் கட்டுவோம் என்பார்கள். கர்நாடக தேர்தலில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எனவே வாக்கு சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…