கருத்து சுதந்திரத்தை தூப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடூரம்..!கவுரி லங்கேஷ்-கல்புத்திரி கொலை..!உண்மை உடைத்தெரிந்த உச்சநீதிமன்றம்..!!
தன் கருத்தைய் வெளிப்படையாக சொல்ல ஜனநாயகத்தில் உரிமை என்ற ஒன்று இருக்கிறதா..? என்று நாடு மக்களை கேள்வி எழுப்ப வைத்த சம்பவம் தான் கன்னட பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் படுகொலை மற்றும் பிரபல எழுத்தாளர் கல்புர்க்கி படுகொலை இந்த இரு கொலைகளும் நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது
இந்த கொலைகள் குறித்து உச்சநீதிமன்றம் இரு கொலைகளும் ஒரே மாதிரி நடந்துள்ளதாகவும்,இதில் சில தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கொலை குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய அரிவுறுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் U.U.லலித் மர்றும் நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதில் சமூக ஆர்வலர்களான நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே இது மட்டுமல்லாமல் பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மற்றும் பகுத்தறிவுவாதி எம்.எம்.கல்புர்க்கி ஆகிய நான்கு சமூக ஆர்வலர்கள் 4 பேரும் தங்களின் கருத்துகளுக்கு வெளிப்படையாகவே மிரட்டல்களை சந்தி வந்தனர்.
மேலும் இதில் 4 பேருமே ஒரே மாதிரியாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடை பெற்றிருப்பதால் இதனை சிபிஐ போன்ற அமைப்பு விசாரிப்பது தான் மிகச் சரியாக இருக்கும் என்று தன் கருத்தை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து ஜனவரி முதல் வாரத்தில் படுகொலை தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.