கருணாநிதி அவர்களைச் நேரில்  பார்த்தேன் ..!குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் ட்வீட்

Default Image

இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தார்.
பின்னர்  சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.
இதன் பின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ,சென்னையில் கருணாநிதி அவர்களைச் நேரில்  சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்