கருணாநிதியின் சிலை திறப்பை முன்னிட்டு சோனியா காந்தி தமிழகம் வருகை….!!

Default Image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆய்வு நடத்தினர்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 16-ம் தேதி காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வரவுள்ளார். இதனையடுத்து டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக அலுவலகத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
மேலும் திமுக அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து சக அதிகாரிகள், தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் விவாதித்தனர். இதனையடுத்து அண்ணா அறிவாலயம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்