கன்னியாகுமாரிக்கு வராத கடல் விமானம்….???
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன.
கடல் விமானத்தில் பறக்கும் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்.
கன்னியாகுமரியில் நூற்றுக் கணக்கான மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் தமிழகமே கலங்கி நிற்கிறது. அப்படியே கடல் விமானத்தை இந்தப் பக்கம் திருப்பி அவர்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் இது வளர்ச்சிதான் என்று ஒப்புக் கொள்கிறோம்.