கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய 3 நாட்கள் தடை….!!
காற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில் கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு,வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com