Categories: இந்தியா

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை:ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை !

Published by
Venu

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .

இதற்கு முன்  உச்சநீதிமன்றம்,கத்துவா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு, ஜம்முக்கு வெளியே மாற்றப்பட வாய்ப்புள்ளதாக,  கோடிட்டு காட்டியது. காஷ்மீரில் வழக்கு நடந்தால், வழக்கறிஞர்களின் வாதத்துக்கோ, காவல்துறையினரின் விசாரணைக்கோ குறுக்கீடு ஏற்படலாம் என்று இந்திய பார் கவுன்சில் கவலை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்தது. வழக்கு நியாயமாக நடக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியும், தேவைப்பட்டால் வழக்கு காஷ்மீருக்கு வெளியேற மாற்றப்படும் என்றும் உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே, ஜனவரி 10ஆம் தேதி, 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மே.7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை காஷ்மீரிலிருந்து மாற்றக்கோரி சிறுமியின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

1 hour ago

ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…

1 hour ago

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…

2 hours ago

விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…

2 hours ago

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

2 hours ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

3 hours ago