கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை:ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை !
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .
இதற்கு முன் உச்சநீதிமன்றம்,கத்துவா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு, ஜம்முக்கு வெளியே மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, கோடிட்டு காட்டியது. காஷ்மீரில் வழக்கு நடந்தால், வழக்கறிஞர்களின் வாதத்துக்கோ, காவல்துறையினரின் விசாரணைக்கோ குறுக்கீடு ஏற்படலாம் என்று இந்திய பார் கவுன்சில் கவலை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்தது. வழக்கு நியாயமாக நடக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியும், தேவைப்பட்டால் வழக்கு காஷ்மீருக்கு வெளியேற மாற்றப்படும் என்றும் உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே, ஜனவரி 10ஆம் தேதி, 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மே.7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை காஷ்மீரிலிருந்து மாற்றக்கோரி சிறுமியின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.