கணவருக்கும் மனைவியின் பிரசவ காலத்தில் 15 நாட்கள் விடுமுறை!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு

Default Image

ஹரியானா அரசு, மனைவியின் பிரவச நேரத்தில் பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணியாற்றும் ஆண்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்க  முடிவு செய்துள்ளது.

Image result for பிரசவ காலம்

மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக ஆட்சி ஹரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரியானா அரசு, பெண்களின் நலன் கருதி அவர்களின் பிரசவ நேரத்தில், அரசுத் துறையில் பணியாற்றும் கணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது.

 

இந்தியாவில்  பொதுவாக பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பிரசவ நேரத்தில் 6 மாதம் வரை விடுமுறை வழங்கும் வழக்கம்  இருக்கும் நிலையில்,ஹரியானா அரசு  கணவர்களுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்