பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் பவன்குமார் என்பவர் பிரிந்து வாழும் தனது மனைவிக்கு மாதந்தோறும் 7,000 ரூபாய் வழங்கி வருகிறார். இந்நிலையில், வாழ்க்கைச் செலவுக்குக் கூடுதல் தொகையையும், கணவரின் ஊதிய படிவத்தை தர உத்தரவிடக் கோரியும் அவரது மனைவி சுனிதா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்தக் கோரிக்கையைக் கீழ் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மத்தியத் தகவல் ஆணையத்தில் முறையிட்டு, கணவருடைய ஊதிய படிவம் மற்றும் உண்மையான சம்பளம் என்ன என கோரியிருந்தார்.
இதையடுத்துப் பவன்குமார் ஜெயினின் ஊதிய விவரங்களை அளிக்க பிஎஸ்என்எல் தகவல் அலுவலருக்கு மத்தியத் தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துப் பவன்குமார் ஜெயின் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கணவனின் ஊதியத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என்றும், அவரை மூன்றாவது ஆளாகக் கருதி ஊதிய விவரங்களைக் கொடுக்க மறுக்கக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…