கணவனின் ஊதியத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு..!நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு..!

Default Image

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் பவன்குமார் என்பவர் பிரிந்து வாழும் தனது மனைவிக்கு மாதந்தோறும் 7,000  ரூபாய் வழங்கி வருகிறார்.  இந்நிலையில்,  வாழ்க்கைச் செலவுக்குக் கூடுதல் தொகையையும்,  கணவரின் ஊதிய படிவத்தை தர உத்தரவிடக் கோரியும் அவரது மனைவி சுனிதா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்தக் கோரிக்கையைக் கீழ் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மத்தியத் தகவல் ஆணையத்தில் முறையிட்டு, கணவருடைய ஊதிய படிவம் மற்றும் உண்மையான சம்பளம் என்ன என கோரியிருந்தார்.

இதையடுத்துப் பவன்குமார் ஜெயினின் ஊதிய விவரங்களை அளிக்க பிஎஸ்என்எல் தகவல் அலுவலருக்கு மத்தியத் தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துப் பவன்குமார் ஜெயின் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கணவனின் ஊதியத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என்றும், அவரை மூன்றாவது ஆளாகக் கருதி ஊதிய விவரங்களைக் கொடுக்க மறுக்கக் கூடாது என்றும்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்