கட்டிங் ,ஷேவிங்..பாடை சுமக்கிறேன்….நடனமாடுகிறேன்..அடித்தால் கூட பரவாயில்லை, வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்…தேர்தல் பிரச்சாரம்…!!

Default Image

எப்படியாவது வெற்றி பெற்று அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும், இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன பொய்களை வேண்டுமானாலும் கட்டவிழ்த்துவிடலாம், என் மீது கோபமிருந்தால் எல்லோரும் சேர்ந்து அடித்தால் கூட பரவாயில்லை, வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள் என்ற விதரணையற்ற, வெட்கமற்ற வாக்கு வங்கி அரசியல்தான் இந்தியாவில் பெரிய ஜனநாயகத் திருவிழாவாக தேர்தல்களை மாற்றியுள்ளது.

மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ, ஒரு திரைப்படத்தில் கூறுவார், ‘மக்களுக்குச் சேவை செய்யவா இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள், சம்பாதிக்கணும் சார்’ என்று கிண்டல் செய்திருப்பார். ஆகவே எல்லாமே மார்க்கெட்டிங் உத்திகள். ஏழை மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பாரதத் திருநாட்டின் தேர்தல்கள் இவ்வாறு ஸ்டண்ட் மாஸ்டர்களின் கோணங்கித் தனங்களாக மாறியிருக்கின்றன, எப்போதும் நூதனங்களையும், பரபரப்பையும் தேடிக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்கும் இம்மாதிரி ஆசாமிகளால் கொண்டாட்டம்தான்.

தெலங்கானாவில் தேர்தல் நேரம், வேட்பாளர்கள் வாக்காளர்களின் சந்தோஷம், துக்கம், என்று அனைத்திலும் பங்கேற்று வருகின்றனர், வாக்காளர் வீட்டில் சாவு நிகழ்ந்தால் பாடையைச் சுமப்பது, கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகள் என்றால் வேட்பாளர்கள் அங்கு சென்று டான்ஸ் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்டி குடும்பத்துடன் ஒன்றி விடும் நூதன உத்தியால் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாக்காளர்கள் வாடிக்கையாளர்களாகவும் இருப்பதால் சலூனில் இவர்களுக்கு வேட்பாளர்கள் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது என்று களமிறங்கியுள்ளார்கள்.

தேர்தல் வரையே தொகுதி தேர்தல் முடிந்த பிறகு அது மாநிலத்தின் ஒரு பகுதி கூட அல்ல என்று இருந்து வரும் இந்திய வேட்பாளர்கள் மீது மக்கள் சலிப்படைந்து நீண்ட காலம் ஆகிவிட்டது, இந்நிலையில் தெலங்கானா வேட்பாளர்களின் இந்த புதிய யுக்தி மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது மக்களிடம் ஒன் டு ஒன் ஒன்றுகிறார்களாம்!! ஆளை விடுங்கடா சாமி என்று மக்கள் ஓட்டம்பிடிக்காமல் இருந்தால் சரி.

தொழில்நுட்பத் திறன் கொண்ட வேட்பாளர்களோ மறுபுறம் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று சமூகவலைத்தளங்கள் மூலம் ‘படித்த’ வாக்காளர்களை எட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது, தெலங்கானாவின் கலைக்கப்பட்ட அவையின் சபாநாயகர் மதுசூதன சாரி, வாக்காளர்களைக் கவர பாடை சுமந்ததும் சமூக வலைத்தளத்தில் பரவலாகியுள்ளது. இதே மதுசூதன சாரி, சலூன் கடை ஒன்றில் ஒருவருக்கு ஷேவிங் செய்த காட்சியும் இப்போது சமூகவலைத்தளங்களி பிரபலமாகியுள்ளது.

டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சாரி, பூபால்பல்லி தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அதற்காக என்ன ஸ்டண்ட்கள் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று களமிறங்கி அனாதை நபர் ஒருவருக்கு சோறு ஊட்டி விட்டதும் சமீபத்தில் நடந்தது.முன்னாள் துணை முதல்வர் டி.ராஜையா உள்ளூர் விழா ஒன்றில் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடினார்.

பொறுப்பு முதல்வர் சந்திரசேகர ராவின் தொழில்நுட்ப மகன், மற்றும் கே.டி.ராமராவ் ஆகியோர் சமூகவலைத்தளங்கள் மூலம் வாக்காளர்களை எட்ட முயற்சி செய்து வருகின்றனர்.இதில் கே.டி.ராமாராவ் தன்னுடைய சமூகவலைத்தளத்தை நிர்வகிக்க 4 நபர் குழுவையே அமைத்துள்ளார்.

“அவர் 4 உறுப்பினர்களைக் கொண்டு தனது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூகவலைத்தள கணக்குகளை நிர்வகிக்கிறார், இவர்கள் வாக்காளர்கள் மத்தியில் டிஆர்எஸ் கட்சியின் சாதனைகளை விளக்க வேண்டும்” என்று பிடிஐயிடம் அவர்கள் தெரிவித்தனர்

கே.டி.ராம்ராவ் முகநூல் பக்கங்களை 8.83 லட்சம் பேர் லைக் செய்கின்றனர். டிஆர்எஸ் கட்சியின் அதிகாரபூர்வ முகநூல் வலைத்தளத்தை 10 லட்சம் பேர் லைக் செய்கின்றன. இதில் கே.சந்திரசேகர ராவின் பேச்சுகள், சாதனைகள் அடங்கிய வீடியோக்கள் உள்ளடக்கங்கள் இருக்கும்இப்படியாக தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க டி.ஆர்.எஸ். கட்சி பல்வேறு நூதனத் திட்டங்களைக் கடைபிடித்து வருகின்றனர்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்