தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் போலி சாமியார் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், உங்கள் வீட்டில் வாஸ்து சரியில்லை. வாஸ்து தோஷத்தை சரி செய்தால் நீங்கள் எடுக்கும் செயல்கள் வெற்றி பெறும். நான் யார் வீட்டுக்கும் செல்வது கிடையாது. உங்கள் வீட்டிற்கு கடவுள் உத்தரவிட்டதால் வந்துள்ளேன் எனக்கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை முழுவதுமாக நம்பிய கங்காதரும், ராதாவும் இதற்கு பரிகாரத்தை கூறுங்கள் சுவாமி என்றனர்.
அவர் கூறியபடி ராதா வீட்டில் இருந்த 35 சவரன் மதிப்புள்ள செயின் மற்றும் தங்க நகைகளை அரிசி பாத்திரத்தில் வைத்து போலி சாமியாரிடம் வழங்கியுள்ளார். அதனை மஞ்சள் துணியில் வைத்து கயிறு கட்டி சிறிது நேரம் பூஜை செய்த சாமியார், இதை பூஜை அறையில் வைத்துவிட்டு மாலையில் குளித்துவிட்டு இதை திறந்து அதில் உள்ள அரிசியை சமைத்து சாப்பிட்டால் வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும் என தெரிவித்தார்.
இதேபோன்று தம்பதியினர் மாலையில் குளித்துவிட்டு பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தாங்கள் வைத்த நகைகள் எதுவும் இல்லை. போலி சாமியார் நகை வைத்திருந்த பாத்திரத்தை மறைத்து வைத்துவிட்டு வெறும் அரிசி உள்ள பாத்திரத்தை அவர்களிடம் வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகத்யாலா போலீசில் கங்காதர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியாரை ேதடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…