கடந்த ஒரே நாளில் 89.56 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 306 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,90,510 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,46,90,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 306 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,75,434 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,464 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,22,795 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் 560 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 92,281 ஆக குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,32,93,84,230 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 89,56,784 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்