ஓரினச் சேர்க்கை வழக்கு:தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பது தவறில்லை !உச்ச நீதிமன்றம்
வயது வந்த இருவர் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பது தவறில்லை என்பதே எங்களது கருத்து என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதில் மத்திய அரசு ஓரினச் சேர்க்கையை குற்றமில்லை என அறிவிக்க கோரிய வழக்கில் வாதிடப் போவதில்லை என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.அதில் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு உபட்டு முடிவெடுப்பதை ஏற்கத் தயார் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிடுகையில்,இந்துமத சட்டங்களையும் ஓரினச் சேர்க்கை வழக்கில் தீர்ப்பளிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும். சட்ட ரீதியில் சகோதரர்கள் இருவர்கள் தம்பதிகளாக வாழ்வது தவறு. தனது துணையை தேர்வு செய்யும் உரிமை சட்டத்தை மீறியதாக அமையக் கூடாது என்று வாதிட்டது.
மத்திய அரசின் வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வயது வந்த இருவர் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பது தவறில்லை என்பதே எங்களது கருத்து என்று தெரிவித்துள்ளனர்.மேலும் ஹதியா வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை உறுதி செய்திருக்கிறது .வாதங்கள் அடிப்படையில் பிரிவு 377 குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.