Categories: இந்தியா

ஓடிய தொழிலதிபரிடம் ஒட்டிய கார் பறிமுதல்…வாங்கிய கடனுக்காக 4 கார் ஏலம்….!!

Published by
Dinasuvadu desk
இந்தியாவில் உள்ள 13 வங்கிகளிடமிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவிடம் இருந்து அவருடைய 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா 13 இந்திய வங்கிகளிடமிருந்து வாங்கிய ரூ. 9000 கோடி கடனை மீட்க கைப்பற்றிய அவருடைய கார்களை இங்கிலாந்து உயர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏல விற்பனையைச் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 13 வங்கிகளிடமிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்குச் சென்று தலைமறைவானார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.அவர் தரவேண்டிய கடனை மீட்க அவரது சொத்துகளைக் கைப்பற்றி ஏலத் தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனால் அவருடைய ஆறு கார்களை இங்கிலாந்தில் ஏலம் விட முடிவுசெய்யப்பட்டது. கடந்த மே மாதம் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த விசாரணையில் சாதகமான தீர்ப்பையும் நீதிபதி வழங்கினார். டிஎல்டி என்ற சட்ட நிறுவனம் இந்திய வங்கிகளுக்காக இந்த வழக்கில் வாதாடி வெற்றிபெற்றது. இதற்கான அமலாக்க உத்தரவு கடந்த வாரம் தரப்பட்ட நிலையில் தற்போது விஜய் மல்லையாவின் கார்களை இங்கிலாந்தில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏலம் விடப்படவுள்ள கார்கள்:

2016 மினி கன்ட்ரிமேன் (AD16 1YX);

2012 மேபேக் 62 (VJM1);

2006 பெராரி எப்430 ஸ்பைடர் (B055 VJM);

2014 ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி சூப்பர் சார்ஜ்டு (F1 VJM);

பராரி எப்512எம் (M811 VGR); போர்ஷே கேயென் (OO07 VJM).வழக்குகளை தனி ஆளாக இருந்து எதிர்கொண்டு வருகி றார் விஜய் மல்லையா. வரும் டிசம்பர் 10ல் லண்டன் வெஸ்ட்மின் ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் வரும் தீர்ப்பைப் பொறுத்து இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

8 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

9 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

9 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

10 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

11 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

13 hours ago