ஓகி புயல் பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு : கேரளா
ஓகி புயலால் தென் தமிழகம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது, கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்ப மடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற ஓகி புயல் அடுத்து கேரளாவை நோக்கி சென்றது. இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
ஏற்கனவே ஒகி புயலால் கேரளாவில் 40 பேர் பலியாகினர். இந்நிலையில் நேற்று கொச்சி கடற்கரையில் அழுகிய நிலையில் மிதந்த 2 பேர் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஒகி புயலுக்கு கேரளாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்தது.
நேற்று ஓகி புயலில் வழிதவறிய 75 மீனவர்களை கடற்படையினர் லட்சத்தீவில் நேற்று மீட்டு கொச்சிக்கு கொண்டு வந்தனர். அந்த மீனவர்களில் 63 பேர் தமிழக மீனவர்கள், 12 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார். மீனவர்களில் 5 பேரின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.