ஓகி புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு : கேரளா

Default Image

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் ஓகி புயலாக வலுபெற்று கன்னியாகுமரி, மற்றும் தென் மாவட்டங்களை புரட்டி போட்ட புயல் குமரி கடற்கரையை விட்டு கேரளா நோக்கி நகன்றது. இதனால் அங்கு பலத்த சேதம் உருவானது.

அதேபோன்று கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஒகி புயல் ஏற்படுத்தியது. மேலும், கடலுக்குள் சென்ற மீனவர்களில் சிலர் நீரில் மூழ்கி இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கேரளத்தின் ஆலப்புழா கடல் பகுதியில் நேற்று காலை 3 உடல்கள் கரை ஒதுங்கியதாகத் தெரிகிறது. மீட்ட சடலங்களை பாதுகாப்புப் படையினர் அவற்றை பிரதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையும் சேர்த்து கேரளாவில் ஓகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.இதற்கு நடுவே, காணாமல் போன 96 மீனவர்களைக் கண்டறியும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது என தகவல்கள் வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்