ஒரே நேரத்தில் 100 சிலிண்டர்கள் வெடிப்பு! பாட்னாவில் பயங்கரம்..!
பீகார் தலைநகர் பாட்னா நகரில் உள்ள புறவழிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் இன்று லாரியில் இருந்து சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்தனர். சுமார் 450 சிலிண்டர்களுடன் இருந்த அந்த லாரியில் இருந்து இறக்கப்பட்ட இரு சிலிண்டர் கைநழுவி தரையில் விழுந்தது.
விழுந்த சிலிண்டர் சூடாக இருந்த லாரியின் சைலன்ஸர் மீது பட்டதில் வெடித்து சிதறியது. இதனால் அந்த லாரியில் தீ பிடித்தது. தீயின் வெப்பத்தால் லாரியில் இருந்த நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பத்துக்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அதற்குள் வேகமாக பரவிய தீ, அருகாமையில் உள்ள ரசாயன ஆலையையும் பதம் பார்த்தது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரி மற்றும் ரசாயன ஆலையில் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.