ஒருவழியாக நிம்மதியான பத்தாம் வகுப்பு மாணவர்கள்…!கணிதத் தேர்வு மீண்டும் நடைபெறாது…!
சி.பி.எஸ்.இ. , பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு மீண்டும் நடைபெறாது என அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புக்கான கணித பாட வினாத்தாளும், 12ஆம் வகுப்புக்கான பொருளியல் பாட வினாத்தாளும், வாட்ஸ்-ஆப் மூலம் முன்கூட்டியே வெளியானதை அடுத்து அந்த இரு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 12ஆம் வகுப்பு பொருளியல் தேர்வு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்ததால், விரைவில் 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத் தேர்வு மீண்டும் நடைபெறாது என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா என எண்ணிக்கொண்டிருந்த மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.