ஒருவழியாக களமிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி ….!பாஜக எம்பிக்களுடன் சேர்த்து உண்ணாவிரதம் …!
பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (ஏப்.12) உண்ணாவிரதம் கடைபிடிக்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது வழக்கமான பணிக்கு இடையே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார்.
பாஜக எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை பேசும்போது, நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டினார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி பிரிவினை வாத அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய பிரதமர், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஏப்ரல் 12-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அனைத்து பாஜக எம்பிக்களும் அவரவர் தொகுதிகளில் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். அதிகாரிகளை சந்திப்பது, கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட அன்றாடப் பணிகள் பாதிக்காத வகையில் பிரத மர் உண்ணாவிரதம் கடைப்பிடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. ஆனால் தொடக் கம் முதலே, பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இரு அவைகளிலும் அலுவல் கள் முடங்கின. காவிரி மேலாண்மை வாரியம் கோரி அதிமுக எம்பிக்களும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இதுதவிர பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.