ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ராஜினாமா கடிதம்…!
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாவிட்டால் கூட்டத் தொடர் முடிந்த மறுநாள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆந்திர எம்.பி.க்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரைச் சந்திக்கச் சென்றபோது அவர் அறையில் இல்லாததால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அறையில் தலையணையை வைத்து அவர்கள் உறங்கிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.