ஒடிசாவில் கிராம மக்களை ஓட..ஓட.! துரத்திய காட்டு யானைகள்..!!

Default Image

ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்குதலால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டம் காட்டு பகுதியிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இந்த யானைகள் தோட்ட பயிர்களை நாசம் செய்தன.

மேலும் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களையும் யானைகள் விரட்டின. இதனால் கிராம மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தோட்ட தொழிலாளர்களும் வீட்டை விட்டு வெளியே வர இயலாமல் முடங்கினர்.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கண்கரடா மற்றும் அடப்படா கிராமங்களில் 5 காட்டு யானைகள் நுழைந்தது. யானைகளை விரட்டவும் அதனை வேடிக்கை பார்க்கவும் மக்கள் கூடிய நிலையில், பொதுமக்களை காட்டு யானைகள் துரத்தி துரத்தி தாக்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வனப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் ரயில் மற்றும் சாலை விபத்துகளிலும் யானைகள் சிக்கி உயிரிழக்கும் சமபவமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் காரணமாக ஒடிசாவில் வனப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்