ஐ.ஐ.டி. பட்டதாரிகள் வேலையை உதறி விட்டு அரசியலில் களமிறங்கினர்!
அரசியலில் களமிறங்குவதற்காக , நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.க்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்கள் வேலைகளை உதறி தள்ளினர். டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தலைமையில், பகுஜன் ஆசாத் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர்கள், அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்தக் கட்சியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் சமூக வலைத்தளங்களில் பணியை தொடங்கி விட்டனர்.
2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொடங்கி தொடர்ச்சியாக போட்டியிடப் போவதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம் ஆகியோரது உருவப்படங்களுடன் கட்சி போஸ்டர்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.