ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : சுஷ்மா ஸ்வராஜ்..!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்காக இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் தோளுடன் தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்திய சமூகத்தினர் நடத்திய கலாசாரா பரிவர்த்தனை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்
நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மா, ஜனநாயக நாடான இந்தியா, பன்முகத்தன்மை, சமத்துவம், சுதந்திரம், போன்ற விழுமியங்களை மதித்து, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பு தருவதாக தெரிவித்தார். இதே போன்று பன்முகத்தன்மை மிக்க பெல்ஜியமும் மக்களிடையே வேற்றுமையை மதித்து வருவதாக குறிப்பிட்ட சுஷ்மா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அக்டோபர் மாதத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் நடைபெற உள்ள ஆசிய ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாட்டை தாம் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் சுஷ்மா தெரிவித்தார்