ஐயப்பனின் பணத்தை வைத்தே ஐயப்பனுக்கு எதிராக அரசு வாதடினால்..பக்தர்கள் காணிக்கை அளிக்காதீர்கள்…!!பினராயிக்கும் பகீர் எச்சரிக்கை..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையாலாம் அவர்களை கோவில நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கலவையான விமர்சனத்தை பெற்றுது.ஆனால் சபரிமலை அமைந்துள்ள கேரளாவில் பெரிய சர்ச்சையாக மாறியது.போராட்டங்களும்,கண்டனக்குரல்களும் சபரிமலையை சுற்றி வந்த நிலையிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் இதற்கு பகதர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.எங்க போராட்டம் பெரிதாக வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் தேவஸ்தானம் தற்காலிகமாக பெண்கள் நுழைய அனுமதி மறுத்தது.இதனிடையே தற்போது மகரஜோதிக்கு கோவில் நடைதிறக்கப்பட உள்ளது.பதினெட்டு படிகளையும் ஏறி மஞ்சு என்ற பெண் தரிசனம் செய்தார் என்று தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் ஐயப்பனின் மகரஜோதிக்கு நாங்களும் பங்கேற்போன் என்று ஆன்லைன் பதிவில் 505 இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்ற நிலையில் கேரள அரசு அவர்களை பாதுகாகப்பாக தரிசனம் செய்ய ஹெலிகாப்டரை சபரிமலையில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது.இந்த ஹெலிகாப்டரில் பெண்களை அழைத்து செல்லவதால் எந்தவித இடையூறுமின்றி கோவிலை அடையமுடியும் என்கிறனர் கேரள அரசியல் வட்டாரம்.இப்படி ஹெலிகாப்டர் ,எதிர்ப்பு என்று சென்று கொண்டிருக்கும் சபரிமலை சர்ச்சையில் புதியதாக ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.
அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறிய கருத்தால் ஹான் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.அதில் சபரிமலை வருவாயை கொண்டும் தான் ஐயப்பன் கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளஅரசு வாதாடும் பட்சத்தில் ஐயப்ப பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.