ஐயப்ப பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட ரெஹனா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின்…!!
ஐயப்ப பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட ரெஹனா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ரெஹனா பாத்திமா என்ற பெண் சபரிமலைக்கு செல்லமுயன்றார்.
அப்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்டித்து போராட்டத்தில் ரெஹனா பாத்திமா ஈடுபட்டார். ஐயப்ப பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் ரெஹனா பாத்திமா கருத்து பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரை போலீசார் கைதுசெய்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ரெஹனா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.