சபரிமலை செல்ல திருப்தி தேசாய்….விமானநிலையத்தில் போராட்டம்…!!
திருப்தி தேசாய் அயப்பன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
சபரிமலை கோவிளுக்கு , அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியதுஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. .பெண் பத்திரிகைஉள்பட பல இளம்பெண்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தல் வரை சென்றும், கடும் எதிர்ப்பால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உருவானது.
பெண்ணியவாதியான திருப்தி தேசய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு திருப்தி தேசாய் கடிதம் எழுதியுள்ளார். அதில், சபரிமலைக்கு ஒரு குழுவினருடன் தான் வர உள்ளதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுள்ளார். இதற்காக தனக்கு மிரட்டல்களும் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் வந்து இறங்கியுள்ளார். விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்று வருவதால், திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த குழுவினரை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
dinasuvadu.com