சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. அங்கு பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இருப்பினும், கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு, தீர்ப்பை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறியுள்ளது.
ஆனால், பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரிகளும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.கடும் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில், தேவஸ்தானம் போர்டு, பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரிகள், இந்து அமைப்புகள் ஆகியோரிடையே நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது.
இந்த சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 22–ந்தேதிவரை நடை திறந்து இருக்கும்.இதையொட்டி, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அதே சமயத்தில், அந்த வயது பெண்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்வதை தடுத்து நிறுத்த பெண் போராட்டக்காரர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை கண்டித்து, பம்பை அருகே உள்ள நிலக்கல்லில், ஒரு பெண் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவர் பெயர் ரத்னம்மா (வயது 51). அவரது தற்கொலை முயற்சியால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும், பக்கத்து வீட்டு பெண்களும் தலையிட்டு அவரை காப்பாற்றினர்.
DINASUVADU
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…