"ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் பெண்கள் அனுமதி" கேரள அரசு அறிவிப்பு..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பிற்கு சங் பரிவார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இம்மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது.
வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே அடுத்த மாதம் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் போது பெண்களும் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU