ஐபோன் பயன்படுத்துபவரா நீங்கள்..! வந்தது புதிய ஆப்பு..! உடனடியா போனை மாத்துங்க….!
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.காரணம் TRAI மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இடையே எப்பொழுதும் கடுமையான போட்டி நிலவுவதே காரணம்.
ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பொதுவாக ஆப்பிள் போன்களுக்கு என தனிப்பட செயலிகள் அற்றும் பயன்படுத்தும் முறைகள் உள்ளன,இதனால்தான் என்னவோ இது எப்போதும் சிறந்த இடத்தைபெற்றுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.
ஆன்ட்ராய்டு பயனர்கள் டி.என்.டி. செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனால் ஆப்பிள் போன்களில் இதை பதிவிறக்கம் செய்ய முடியாது.பிளே ஸ்டோரில் இந்த செயலிக்கு பயனர்கள் மோசமான விமர்சனங்களையே வழங்கியிருக்கின்றனர். இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்வது குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
“டிராய் விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள், தங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற செயலிகளை இயக்க தேவையான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “விதிமுறைகளின் படி இதுபோன்ற செயலிகளை அனுமதிக்காத சாதனங்களில் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சாதனங்களை தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-இல் இருந்து நீக்க முடியும்.”
டி.என்.டி. 2.0 செயலியை ஆப்பிள் போன்களில் இதை பதிவிறக்கம் செய்ய முடியாது என்ற சூழலில் உங்கள் போனில் 3ஜி, 4ஜி அடிப்படை நெட் வசதி துண்டிக்கப்படும்.அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை.