அமைச்சர் ஹர்ஸ் வர்தன், ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங்கே சொல்லி இருக்கிறார் என்று கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற 105-வது இந்திய அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார். “சமீபத்தில் நாம் புகழ்பெற்ற விஞ்ஞானியும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாங்கிங்கை இழந்துள்ளோம். ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக ஸ்டீபன் ஹாங்கிங் உறுதிபட தெரிவித்தவர்” என ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.
ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியதாக எவ்வித பதிவுகளும் இல்லாத நிலையில், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு பேசுகிறீர்கள் என ஹர்ஷ் வர்தனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “ஆதாரத்தை நீங்கள்தான் தேட வேண்டும். வேதங்களில் ஐன்ஸ்டைனின் தத்துவங்களை விட உயர்த்த கருத்துகள் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங் பதிவு செய்துள்ளார். இதை அறிய நீங்களும் சிறிது வேலை செய்ய வேண்டும்” என அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சை அடுத்து, ஸ்டீபன் ஹாக்கிங் உண்மையிலேயே அப்படி கூறியுள்ளாரா என அறிய ஏராளமானோர் இணையத்தில் தேடத் தொடங்கியதால் Vedas எனும் ஹாஷ்டேக் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.
இதனிடையே, ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் முகநூலில் உள்ள போலி கணக்கு ஒன்றில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு இத்தகைய பொய்யான தகவலுடன் பதிவொன்று இடப்பட்டுள்ளதை கண்டெடுத்துள்ள இணையவாசிகள் அதனை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…