ஐநாவில் தமிழர் பிரதமரானாலும் இந்தியில் பேச வேண்டிய கட்டாயத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும் ?
ஐநாவில் இந்தியை அலுவலக மொழியாக்குவது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், 22 நாடுகளில் பேசப்படும் அரபி மொழியே ஐநாவில் அலுவல் மொழியாக ஆக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டுமே பேசப்படும் இந்தியை ஆக்க முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தையோ, மேற்கு வங்கத்தையோ சேர்ந்த ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ, பிரதமராகவோ பதவியேற்கும் நிலையில், அவரும் ஐநாவில் இந்தியில் பேசியாக வேண்டிய கட்டாயத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்றும் சசிதரூர் வினவினார். இதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், சசிதரூரின் கருத்து அவரது அறியாமையை வெளிப்படுத்துவதாக விமர்சித்தார்.இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது .
source: dinasuvadu.com