ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு டெபிட் கார்டு பயன்படுத்துவோரிடம் இனி பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயிலில் டிக்கெட் எடுக்க இணையதளத்தில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகம். தினமும் லட்சக்கணக்கானோர் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவுக்கான கட்டணத்தை டெபிட், கிரிடிட் கார்டு மூலம் செலுத்தும்போது, பரிவர்த்தனை கட்டணமாக குறிப்பிட்ட தொகை வங்கிகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகின்றன. கிரிடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை கட்டணமாக 1.8 சதவீதமும், டெபிட் கார்டுகளுக்கு அந்தந்த வங்கிகள் நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், ரயில் முன்பதிவுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ஐஆர்சிடிசி கடிதம் எழுதியது. இந்நிலையில், டெபிட், இ-வாலட் மூலம் முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்தியுள்ளன. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…