ஏ.டி.எம்_களில் குறைந்த பணம்…முடிவை திரும்பப்பெற வேண்டும்…வங்கித் தொழிற்சங்கம் வலியுறுத்தல்…!!

Default Image

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பணத் தேவை மிகுந்த தருணத் தில் ஏ.டி.எம். மூலம் எடுக்கும் பணத்தின் அளவை 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயா கக் குறைத்து இந்திய ஸ்டேட் வங்கி வெளியிட்டிருக்கும் அறி விப்பு தவறான நேரத்தில் எடுக் கப்பட்ட மிகத் தவறான முடி வாகும் என இந்திய ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பின் (AFCCOM) தலைவர் எஸ்.பி. இராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஏ.டி.எம்.களில் நடக்கும் மோசடிகளைத் தடுக்கத் இத்த கைய முடிவை எடுத்திருப்பதாக வங்கி அளித்திருக்கும் விளக் கம் வியப்பை அளிப்பதாக உள்ளது.
ஸ்கிம்மர் கருவிகளின் துணையுடன் ஏ.டி.எம்.களில் நடத்தப்படும் மோசடிகளைத் தடுக்கத் தேவையான தொழில் நுட்ப மாற்றங்கள் (TECHNOLOGY UPGRADATION ), அமைப்பு ரீதியான மாற்றங்கள் (SYSTEM UPGRADATION) மற்றும் விஜி லன்ஸ் முறையில் மாற்றங்கள் செய்வதற்குப் பதி லாக ஏ.டி. எம்.களில் தினசரி எடுக்கும் பணத்தின் அளவைக் குறைப் பது நடுத்தர மக்களை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை எளியவர்களைப் பெரிதும் பாதிக்கும், ஏ.டி.எம்.களில் மோசடி செய்வோரைக் கண்ட றிந்து தண்டிக்காமல், வங்கி யின் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேவைக் கட்டணம் செலுத்தும் வகையில் தண்டிக்க வகை செய்யும் வங்கியின் முடிவைத் தாமதமின்றித் திரும்பப் பெறவேண்டும்.
புதிதாக வெளியிடப் பட்டி ருக்கும் நூறு ரூபாய் நோட்டின் அளவு சிறியதாக இருப்பதால், ஏ.டி.எம்.களில் வைக்க முடி யாத நிலை இருப்பதாகவும், அதற்கேற்ப ஏ.டி.எம்.களை மாற்ற வேண்டிய நிலை (NEED FOR RECALIBRATION) இருப்ப தாகவும் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கம் வாடிக்கையாளர்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது. ஏ.டி.எம்.களை கோடிக் கணக்கான ரூபாய் செலவில் அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லாத வகையில், அரசும், ரிசர்வ் வங்கியும் புதிய நோட்டுகளை வெளியிடும் போது வண்ணத் திலும் வடிவத்திலும் (COLOR AND DESIGN) மட்டும் மாற்றம் செய்யவேண்டுமேயன்றி நோட்டு களின் அளவில் மாற்றம் செய் யாமல் தொலைநோக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும்.
20 பொதுத்துறை வங்கிக ளும், 25 தனியார் துறைவங்கி களும், 43 வெளிநாட்டு வங்கிக ளும் செயல்பட்டு வரும் இந்திய வங்கித்துறையில், இந் தியன் ஸ்டேட் வங்கியில் நடக் கும் ஏ.டி.எம். பண மோசடிக ளைக் காரணம் காட்டிப் பணம் எடுக்கும் அளவை 20,000 ரூபாயாகக் குறைத்திருப்பது 63 ஆண்டுக்கால பாரம்பரியச் செழுமை கொண்ட இந்தியன் ஸ்டேட் வங்கியைப் பலவீனப் படுத்துவதாக அமையும் என் பதை உணர்ந்து தவறான முடி வைத் தாமதமின்றி திரும்பப் பெற இந்தியன் ஸ்டேட் பேங்க் நடவடிக்கை எடுக்க வேண் டும். வாடிக்கையாளர்களின் நல்லெண்ணத்தையும் நன்னம் பிக்கையையும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், நாட்டு நலனில் நாட்டத்தோடு செயல்படும் பொதுத்துறை வங் கிகளில் முதன்மையானதாகத் திகழும் இந்தியன் ஸ்டேட் வங்கியை மென்மேலும் பலப் படுத்தும் வகையில் ஏ.டி.எம். குறித்த தவறான முடிவைத் திரும்பப்பெற ஸ்டேட் வங்கி நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay