ஏழைகளை வைத்து அரசியல்…எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி….!!
ஏழைகளையும் விவசாயிகளையும் வைத்து அரசியல் செய்வதாக, எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரை செய்தார். நவுகரா எனுமிடத்தில் பேசிய அவர், மத்திய அரசை எதிர்க்க வழி தெரியாமல் எதிர்கட்சிகள் ஏழைகளை வைத்து அரசியல் செய்வதாக கூறினார். அனைவரும் வளம் பெற வேண்டும் என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என்று கூறிய அவர், நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்தவர்கள் மக்களின் வலியை புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். தான் உங்களில் ஒருவன் உங்களை போலவே வாழ்கிறேன் என்று கூறிய பிரதமர், ராகுல்காந்தியை போல தங்க கரண்டியுடன் பிறக்கவில்லை என்று தெரிவித்தார்.
dinasuvadu.com