ஏர் ஏசியா விமான பயணம் கனமழையால் திடீர் ரத்து!
ஏர் ஏசியா விமான ஊழியர்கள் , கனமழைக்கு மத்தியில், விமானத்தில் இருந்து வெளியேற மறுத்த பயணிகளை அடாவடித்தனம் செய்து அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, டார்ஜிலிங் அருகே உள்ள பாக்தோக்ரா ((bagdogra)) நகருக்கு நேற்று செல்லவிருந்த அந்த விமானத்தில், பயணிகள் அமர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் புறப்படவில்லை. கனமழையால், விமானத்தில் இருந்து வெளியேற மறுத்த பயணிகளுக்கு தண்ணீர் கூட தராமல், ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக கூறப்படுகிறது. பயணிகளை வெளியேற்றுவதற்காக ஏசி-யை முழு அளவில் இயக்கி அதிகமாக குளிரூட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பெண் பயணிகளும், சிறுவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனிடையே, பயணிகள் அசவுகரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.