ஏப்ரல் 12ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம்…!
வருகிற 12ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில், கடந்த 30ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், வருகிற 12ஆம் தேதி கர்நாடகவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட அமைப்புகளின் சார்பில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நகராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் புதிய அரசியல்வாதிகளான நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும், எந்த சூழலிலும், அவர்கள் இருவரும், கர்நாடகாவிற்கு வரக்கூடாது என்றும் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.