ஏன்..? தாமதம் பெயரை மாற்றுங்கள்…பராபட்ச பிஜேபி……இல்லை….மம்தா கடும் தாக்கு..!!!
ஏன் தாமதன் பெயரை மாற்றுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி விமர்சித்துள்ளார்.
கோல்கட்டா மாநில மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்க்ளா என மாற்றுவதற்கு தீர்மானம் எல்லாம் நிறைவேற்றப்பட்டு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசை வசை பாடியுள்ளார் முதல்வர் மம்தா.
இந்த பெயர்மாற்றம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மக்களின் விருப்பதற்கு ஏற்ப தான் மாநிலத்தின் பெயரை மேற்கு வங்கம் என்பதிலிருந்து ‘பங்க்ளா’ என்கிற வங்கம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கலந்த பெயரில் மாற்றம் செய்வதற்காக மாநில மக்களின் ஒத்துழைப்போடு தீர்மானம் ஜூலை மாதத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் உள்துறை இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இதே நேரத்தில் பா.ஜக ஆளும் பல மாநிலங்களில் ஏன் அவற்றின் பல நகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படுகின்றது இதற்கு மட்டும் ஒப்புதல்.
மேலும் அவர்கள் அளித்த ஒப்புதல் மீது உடனடி நடவடிக்கை எடுத்த பா.ஜக அரசு ஏன்..?எங்கள் கோரிக்கை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் ஒரிசா பெயர் ஒடிசாவாகவும் மற்றும் பாண்டிச்சேரி பெயர் புதுச்சேரியாகவும் மெட்ராஸ் என்ற பெயர் சென்னை எனவும் பெங்களூர் பெயர் பெங்களூரு என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஏன் உத்தரபிரதேசத்தில் கூட பெயர்கள் மாற்றப்பட்டது
ஆனால் மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றுவதற்கு மட்டும் தாமதம் பாரபட்சம் மேலும் இதுவரை ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவேசமாக கூறினார்.
DINASUVADU