ஆகஸ்ட் 29-ஆம் தேதி ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம்-பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
தேசிய விளையாட்டு தினத்தன்று ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,இந்தியா பெரிய திருவிழாவிற்கு தயாராகி வருகிறது.இந்தாண்டு காந்தியின் 150வது பிறந்தாநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அதன்படி செயல்படுவோம். நம் தாய்நாட்டை பிளாஸ்டிக் மாசிலிருந்து காப்போம். திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத இந்தியாவையும் உருவாக்கி காந்தியடிகளுக்கு அர்ப்பணிப்போம்
ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம் செய்யப்படும்.அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை பார்க்க விரும்புகிறேன் என்று உரையாற்றினார்.