சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வு பெற்ற அதிகாரி, தன் மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
“வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், ஒரு அரசு ஊழியர் மீது கொடுக்கப்படும் புகாரின் அடிப்படையில், அவரை உடனடியாக கைது செய்துவிடக் கூடாது, டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்த வேண்டும், அதில் முகாந்திரம் இருந்தால்தான் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்அதிகாரி அனுமதியுடன் கைது செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. பிரதமர் நரேந்திர மோடியிடம், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தின.
இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அதில், தீர்ப்பை மறுஆய்வு செய்து, திருத்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு, எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்றும், ஏற்கனவே உள்ள விதிமுறைகளை நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்; எஸ்.சி, எஸ்.டி சட்டத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல. என நீதிபதிகள் கூறினர்.
எஸ்.சி, எஸ்.டி வழக்கில் மத்திய அரசின் சீராய்வு மனு மீதான விசாரணை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு; வழக்கில் எதிர்மனுதாரர்கள் 2 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…